பொலிஸார்

ரத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய இளைஞன் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் ரத்கம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.