Colombo Tamil News

ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கினை மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினை நியமித்து விசாரணை செய்யுமாறு நீதியரசரிடம் சட்டமா அதிபர், இன்று (10) கோரிக்கை விடுத்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கம்பஹா, ரத்துபஸ்வல பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்துக்கு உள்ளாகிய நிலையில் பொதுமக்கள் மூவர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில், துப்பாக்கி சூடு நடத்திய இராணுவ குழுவிற்கு தலைமை வகித்த பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட நால்வர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையிலேயே, மூவரடங்கிய நீதிரசர்கள் குழாமினை நியமித்து இந்த வழக்கினை விசாரணை செய்யுமாறு நீதியரசரிடம் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.