சிறுமியின் சடலம்

கிளிநொச்சி – பரந்தன் பிரதேசத்தில் ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று (01) இரவு சென்ற ரயில் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கிளிநொச்சியை சேர்ந்த ராஜேஸ்வரன் லதுஷான் (வயது 14) என்ற மாணவரே உயிரிழந்துள்ளதாகவும், சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.