சினிமா

ராதிகா ஆப்தேவுக்கு கொரோனா பாதிப்பா?

தமிழில் வெற்றிச் செல்வன், காலா, உள்பட சில படங்களில் சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.

குறும்படத்தில் நிர்வாணமாக நடித்தும் பரபரப்பு கிளப்பினார். தற்போது அவர் “கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன்” என்ற எழுதி அவர் வைத்தியசாலையில் காத்திருப்பது போன்ற ஒரு படத்தையும் பதிவிட்டிருந்தார்.

இதனால் ராதிகா ஆப்தேவுக்கு கொரோனா பாதிப்பு என்கிற செய்தி பரவியது.

இதற்கு பதில் அளித்த ராதிகா ஆப்தே, “லண்டனிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்புதான் வந்தேன். அரசின் அறிவுறுத்தலின்படி கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதற்கான பரிசோதனைக்கு சென்றேன்.

பரிசோதனையின் முடிவு இன்னும் வரவில்லை. என்றாலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையிலேயே இரண்டு வாரங்களுக்கு என்னை தனிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்”. என்று கூறியிருக்கிறார்.

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close