பெண் தொழிலாளர்கள்

பொகவந்தலாவை லொய்னோன் தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 9 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றுக் காலை 11மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குளவி கொட்டுக்கு இலக்கான பெண்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

தேயிலை மலையில் இருந்த குளவிகூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியமை தெரியவந்துள்ளது.