வடக்கு – கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

வடக்கு – கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 19ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் தொடர்பாக நேற்று (04) மட்டக்களப்பில் கிழக்கு மாகாண காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அ.அமலநாயகி, அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ரி.செல்வராணி, திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் எஸ்.சரோஜா தேவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை வெளியிட்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்ப கல்லூரி, ஆசிரிய பயிற்சி கல்லூரி, ஆசிரிய சங்கங்கள், பாடசாலை மாணவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், ஊடக சங்கங்கள், சமய தலைவர்கள், இளைஞர் கழகங்கள், விளையாட்டு கழகங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம் வர்த்தக சங்கத்தினர் வடக்கு, கிழக்கில் தமது வர்த்தக நிலையங்களை மூடியும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சங்கத்தினர் தமது போக்குவரத்து சேவைகளை நிறுத்தியும் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Website – www.colombotamil.lk

Facebook – http://www.facebook.com/TheColomboTamil

Twitter – www.twitter.com/TheColomboTamil

Instagram – www.instagram.com/TheColomboTamil

Contact us – info@colombotamil.lk

#SriLankaNews, #SriLankanNews, #LankaNews, #Lanka, #Tamil, #SriLanka, #ColomboNews

Related posts