Wednesday, January 29, 2020.
Home இலங்கை வட்டவளை விக்டன் தோட்டத்தில் பெண்ணின் சடலம் மீட்பு; மகன், மருமகள், பேரன் கைது

வட்டவளை விக்டன் தோட்டத்தில் பெண்ணின் சடலம் மீட்பு; மகன், மருமகள், பேரன் கைது

கொலை செய்யப்பட்டு பாழடைந்த கிணற்றுக்குள் போடப்பட்டிருந்த நிலையில் வட்டவளை- விக்டன் தோட்டத்தில் உயிரிழந்த 81 வயதுடைய பெண்ணின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சஞ்சீவ பொன்சேகா முன்னிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

சஞ்சீவ பொன்சேகா

நோய்வாய்ப்பட்டிருந்த 81 வயதுடைய தாய், கடந்த 9ஆம் திகதி வீட்டில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து, அவரது மகனும் உயிரிழந்த பெண்ணின் 13 வயதுடைய பேரப்பிள்ளையும் ஓட்டோவொன்றில், சடலத்தைக் கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், அவர்கள் சென்ற பின்னர், அவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையென, உயிரிழந்த பெண்ணின் மருமகள், வட்டவளை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், இத்தாயின் சடலத்தைக் கண்டுபிடிப்பதற்காக, ஹட்டன் பொலிஸ் நிலைய மோப்ப நாயின் உதவியுடன், விக்டன் தோட்ட மக்களும் இணைந்து, நேற்று (12) தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

 வட்டவளை பொலிஸார்

இது ஒரு கொலையாக இருக்கலாம் என்று, தோட்ட மக்கள் சந்தேகப்பட்டதையடுத்து, இது தொடர்பாக, பொலிஸாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், தனது தாய், தந்தை, சகோதரன் ஆகியோர் இணைந்து தனது பாட்டியை, தடியால் தாக்கி, கதிரையில் கட்டி வைத்த பின்னர், பையொன்றில் கட்டி, பாட்டியைக் கொண்டு சென்றுவிட்டதாக 8 வயது இளைய பேரன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

 வட்டவளை

இதனையடுத்து, உடனடியாக சிறுவனின் தாயான உயிரிழந்த பெண்ணின் மருமகள் வட்டவளை பொலிஸரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அத்துடன், கொழும்புக்கு தப்பிச் சென்ற நிலையில் உயிரிழந்த பெண்ணின் மகன் மற்றும் மூத்த பேரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

 வட்டவளை பொலிஸார்

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, வீட்டுக்கு பின்புறத்திலுள்ள பாழடைந்த கிணற்றில் தாயின் சடலத்தை போட்டு மூடியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்களை சம்பவ இடத்துக்கு அழைத்துச்சென்ற வட்டவளை பொலிஸார், 81 வயதான பெண்ணின் சடலத்தை மீட்டதுடன், நீதவானின் உத்தரவுக்கு அமைய, பெண்ணின் மரணம் கொலையா அல்லது இயற்கையானதா என்பது தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ள டிக்கோயா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 வட்டவளை பொலிஸார்

பெண்ணின் சடலத்தை துணியால் சுற்றி பாழடைந்த கிணற்றுக்குள் வீசி, சடலத்தை மீட்க முடியாதவாறு பாரிய கற்களை அதன்மீது வீசியிருந்ததாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு சந்தேக நபர்கள அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்தில், பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.

 பொலிஸார்

இதன்போது, கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் அழைத்துச்சென்றுள்ளனர்.

 வட்டவளை பொலிஸார்


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

இதயும் பாருங்க...

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு ; விண்ணப்பங்கள் தவறான முறையில் விநியோகம்

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் தவறான முறையில் விநியோகிக்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள்...

இனி 24 மணி நேரமும் மும்பை திறந்திருக்கும்!

இந்தியாவின் தூங்காத நகரம் என்று அழைக்கப்படும் மும்பை, இனி 24 மணி நேரமும் திறந்திருக்கும் நகரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அமைச்சரவை நேற்று (ஜனவரி 22) கூடியபோது மால்கள், மல்டிபிளெக்ஸ் மற்றும் கடைகளை அடுத்த திங்கட்கிழமை...

அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் டகால்டி!

சந்தானம் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் டகால்டி திரைப்படம். இதுவரை எந்த சந்தானம் படமும் தொடாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. முதல் முறையாக தமிழகமெங்கும் 475+ திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் சந்தானம்...

யாழ். மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் உண்ணாவிரதம்

கடந்த இரண்டு நாட்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள், இன்று (24) தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நான்கு அம்சக் கோரிக்கையை முன்வைத்து நேற்று முன்தினம் ஆரம்பித்த...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...