வட மேல் மாகாணம் மற்றும் கம்பஹாவில் இன்றும் ஊரடங்கு

44
பொலிஸ் ஊரடங்கு சட்டம்
colombotamil.lk

வட மேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இன்று மாலை 07 மணி நாளை அதிகாலை காலை 04 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

கம்பாஹா பொலிஸ பிரிவில் மினுவாங்கொட தொம்பே கனேமுல்ல கிரிந்திவெல மல்வதுஹிரிபிடிய மீரிகம நிட்டம்புவ பூகொட வெயங்கொட விரகுல வெரிவேரி பல்லெவெல யக்கல ஆகிய பிரதேசங்களும் இதில் அடங்கும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.