வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

37
social-media
colombotamil.lk

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையில் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்

அத்துடன், போலியான தகவல்களை பரப்பும் குழுக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இவ்வாறான நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் தயாராவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.