Latest news from around the world

வன்புணர முயற்சித்த இளைஞனின் நாக்கை கடித்து துப்பிய பெண் மருத்துவர்

தென்னாபிரிக்காவில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிந்த பெண் மருத்துவர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் நாக்கைக் கடித்து துப்பிய தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

பெண்மருத்துவர் பணிக்களைப்பில் அங்குள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த ஒரு இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

அவரிடமிருந்து தப்பிக்க நினைத்த மருத்துவர் வாலிபரின் பாதி நாக்கைக் கடித்துத் துப்பினார். இதில் காயமடைந்த வாலிபர் அவ்விடத்திருந்து ரத்த வெள்ளத்துடன் தப்பித்து ஓடியுள்ளார்.

அத்துடன், அப்பெண் மருத்துவர் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், இளைஞனை பிடித்துச் சிறையில் அடைத்ததாகத் தெரிகிறது.