கந்தப்பளை

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் ரயிலுடன் மோதுண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

வவுனியா மூன்றுமுறிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் பஸ்களை சுத்தம் செய்து வந்த 25வயதுடைய கல்கமுவ பகுதியைச் சேந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

சடலம் ரயில் கடவைக்கு அருகே காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், சடலத்துக்கு அருகில் சில்லறைக்காசு, தீப்பெட்டி என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.