ஊடக அறம், உண்மையின் நிறம்!

வவுனியா விபத்தில் பெண் காயம்

வவுனியா ரயில் நிலைய வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (19) காலை 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குருமன்காடு பகுதியிலிருந்து ரயில் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் சிறு வீதியால் திரும்ப முற்பட்டுள்ளது.

அப்போது, அதே வீதியில் பின்புறமாக பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.