“வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றவில்லை”

“வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றவில்லை”

நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள வரவு -செலவுத் திட்டமானது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இல்லை என, ஸ்ரீலங்கா சுந்ந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வாகனங்களின் விலையை அதிகரித்துள்ள அரசாங்கம், பொய்யாக கனவு மாளிகையை உருவாக்க முனைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் மாதம் முதல் அரச ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிப்பதாக கூறும் அரசாங்கத்தால், தற்போது அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கு கூட முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts