ஊடக அறம், உண்மையின் நிறம்!

விடாது பெய்த மழையால் இன்றைய ஆட்டமும் கைவிடப்பட்டது!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண லீக் ஆட்டம் நாட்டிங்காமில் இன்று நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் நேற்றில் இருந்து நாட்டிங்காமில் கடும் மழை பெய்து வந்ததால் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழும்பியது.

போட்டிக்கான நாணயசுழற்சி நேரத்தில் மழை பெய்யவில்லை. ஆனால் மேகம் கருமையாக திரண்டு இருந்ததால் அரைமணி நேரம் கழித்து, சூழ்நிலையை பார்த்து நாணயசுழற்சி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு அறிவித்த மறுநிமிடத்தில் இருந்து கனமழை பெய்யத் தொடங்கியது. இலங்கை நேரப்படி போட்டி தொடங்கும் மதியம் 3 மணியில் இருந்து இரவு 7.40 மணி வரை மழை ஓயவில்லை.

இதனால் போட்டி கைவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகவே, நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.