சிறுமியின் சடலம்

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணுக்காய் வீதியின் வடகாடு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்

பாலிநகர், வவுனிக்குளத்தை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர்களான குணாளன் டிஷாந்தன் மற்றும் ஜீவகுமார் ஜினுசன் ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் சம்பவ இடத்துக்கு விரைந்த மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இரண்டு சடலங்களையும் எடுத்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளனர்