விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

முந்தல், மதுரங்குளி நகரில் இன்று (14) இடம்பெற்ற விபத்தில் ரயில்வே திணைக்களத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மதுரங்குளி கீர்த்திசிங்க கம பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நாத்தாண்டிய பகுதியில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசு ஜீப் ஒன்றும், மதுரங்குளியில் இருந்து முந்தல் பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts