ஊடக அறம், உண்மையின் நிறம்!

விபத்தில் பெண் உட்பட இருவர் பலி

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கலிகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.