Sri Lanka 24 Hours Online Breaking News

வூஹான் கிருமித்தொற்று: உயிரிழப்பு எண்ணிக்கை 54ஆக அதிகரிப்பு; 1600 பேர் பாதிப்பு

0

சீனாவில் வூஹான் கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா கிருமியால் தற்போது புதிதாக 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கிருமியால் 1610 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வூஹான் கிருமித்தொற்றால் ஹூபெய் மாநிலம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஹூபெய் மாநிலத்திற்கு நூற்றுக்கணக்கான ராணுவ மருத்துவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

கிருமித்தொற்று வேகமாக நாட்டை ஒரு மோசமான சூழ்நிலைக்கு தள்ளுவதாக சீன ஜனாதிபதி சி ஜின்பிங் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா கிருமி சீனாவின் பல நகரங்களில் பரவியுள்ளது. சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடடுகளிலும் கிருமி பரவியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like