‘வேட்பாளராக களமிறங்க தேவையானளவு ராஜபக்ஷவினர் உள்ளனர்’

40
W3Schools

ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், வேட்பாளர்களாக களமிறங்குவதற்கு ஏனைய ராஜபக்ஸவினர் உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன இதனைக் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஒன்றிணைந்த எதிரணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தயார்படுத்தலுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

வேட்பாளரை தெரிவு செய்துக்கொள்ள முடியாத நிலை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. ஏதாவதொரு விதத்தில் எமது வேட்பாளரை நாங்கள் தெரிவு செய்தாகிவிட்டது. வேட்பாளரை பெயரிடுங்கள் என்றே ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாங்கள் கூறுகின்றோம்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ போட்டியிடுவதை தடுக்க முயற்சிக்கும் தரப்பினர் ஒருவேளை தமது முயற்சியில் வெற்றிப்பெற்றால், தேர்தலில் போட்டியிடுவதற்கு தேவையானளவு ராஜபக்ஷக்கள் உள்ளனர்” என்றார்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

W3Schools