ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க கோரிக்கை – மனு தள்ளுபடி

28
W3Schools

பராமரிப்புப் பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவேண்டும் என்ற வேதாந்தாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்தின் வழக்கையும் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் வேதாந்தாவுக்கு சொந்தமாக இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல வருடமாக தூத்துக்குடி மக்கள் போராடி வருகிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்றப் போராட்டத்தின்போது ஏற்பட்டக் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதாக் கூறி காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

அதன்பிறகு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட, ஆலையைத் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

அதனால் ஆலை இன்னும் மூடிதான் இருக்கிறது. இந்த நிலையில்தான், வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அதில் எந்திரங்களைப் பழுதுபார்க்கவும் பராமரிப்புக்காகவும் ஆலைக்குள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வேதாந்தாவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததோடு வழக்கையும் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது.

W3Schools