ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஹட்டனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக யுவதி மீட்பு

ஹட்டன் மேபில்ட் சாமஸ்பிரில் 24 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (23) அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவதியின் தந்தை தினந்தோரும் மது அருந்திவிட்டு வந்து மகளுடன் சண்டைப்பிடிப்பதாகவும் நேற்று இரவும் மதுபானம் அருந்திட்டு கடுமையான முறையில் சண்டைபிடித்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனது தந்தை மது மருந்தி விட்டு வந்து மோசமான முறையில் சண்டை பிடித்ததன் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்வதாக குறித்த பெண் எழுதிய கடிதத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

யுவதியின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பபட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கபடுமென பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.