இடம்பெயர்வு

ஹட்டன் பன்மூர் தோட்டத்தில், 13 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 60 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வௌ்ளநீர் குடியிருப்புகளுக்குள் உட்புகுந்துள்ளதால் இவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இடம்பெயர்ந்த குடும்பங்கள் பாதுகாப்பான வகையில், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான உதவிகளை, அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர் முகாமைத்துவ நிலையம் மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை, பன்மூர் குளத்தின் அணைக்கட்டு உறுதியற்ற நிலையில் காணப்படுவதாகவும், இது உடைப்பெடுத்தால், பன்மூர், அலுத்கம, டிக்கோயா ஆகிய பகுதிகளிலுள்ள பல வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.