ஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் – பொலிஸார் கடும் மோதல்

இதயும் பாருங்க

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...

முஸ்லிம் திருமணம், விவாகரத்து தொடர்பிலான திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது எல்லையை 18 ஆக மாற்றம் செய்யும்...

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...

ஹொங்கொங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

ஹொங்கொங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் 10 வாரத்தை எட்டி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை விக்டோரியா பூங்காவில் அமைதி பேரணி நடத்த போராட்டக்காரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பங்கேற்றனர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் பொலிஸாரின் தடையை மீறி அங்கிருந்து வெளியேறி முக்கிய சாலையில் படையெடுத்தனர்.

இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பொலிஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டு, போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். அதே சமயம் போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசி எறிந்தனர்.

இதனால் அந்த பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. அதே போல் ஹொங்கொங்கின் மத்திய மாவட்டங்களிலும் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பயங்கர மோதல்கள் அரங்கேறின. மேலும் ரயில் நிலையங்களில் திரண்டிருந்த போராட்டக்காரர்களை பொலிஸார் சுற்றிவளைத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, தடியடியும் நடத்தினர்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேலும், பொலிஸார் சிலர் போராட்டக்காரர்களை போல் வேடமணிந்து கூட்டத்துக்குள் நுழைந்து போராட்டக்காரர்களை கைது செய்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது.

இது புதுசு

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...

More Articles Like This