10 வருடங்களாக இந்திய அணி செய்த தவறு... சரி செய்த பிசிசிஐ
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்து வந்த பிரச்சனைக்கு பிசிசிஐ ஒரு தீர்வு கண்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்து வந்த பிரச்சனைக்கு பிசிசிஐ ஒரு தீர்வு கண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் சேவாக், சச்சின், கங்குலி, யுவ்ராஜ், ரெய்னா என பல திறமை வாய்ந்த பேட்ஸ்மன்களுக்கு பந்து வீசவும் தெரியும்.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஷேவாக், சச்சின், யுவராஜ் எல்லாம் பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்கள்.
ஆனால் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் இருந்த காலத்தில் இது முற்றிலும் இல்லாமலே போய்விட்டது.
இதற்கு காரணம் சச்சின், சேவாக், கங்குலி போல் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தலைசிறந்த வீரர்களுக்கு பந்து வீசத் தெரியாதது தான்.
விராட் கோலி எப்போதாவது வேகப்பந்து வீசுவார். ஆனால் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அணிக்கு முக்கியமான நேரத்தில் கூட சேவாக், சச்சின் பந்து வீசி இருக்கிறார்கள்.
ஆனால், அந்த நிலை கடந்த 10 ஆண்டுகளாக இல்லாமல் இருந்ததுடன், என்னதான் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற வீரர்கள் இருந்தாலும் பேட்ஸ்மேன்கள் பந்து வீசாமல் இருந்தது மிகப்பெரிய குறையாகவே இந்திய அணிக்கு இருந்தது.
இதனை கருத்தில் கொண்டு சுழற்பந்து வீச தெரிந்த பேட்ஸ்மேன்களை அணிக்கு தேர்வு செய்ய தற்போது பிசிசிஐ முக்கிய முடிவு எடுத்திருக்கிறது.
தற்போது இந்திய அணியில் இடம் பிடிக்க போட்டி அதிகமாகி விட்டதால், கூடுதலாக சுழற் பந்து வீசத் தெரிவது என்பது முக்கியமான ஒரு அம்சமாக மாறிவிட்டது.
ஜிம்பாபே அணிக்கு எதிராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் ஷர்மா, ரியான் பராக் என மூன்று பேட்ஸ்மேன்களுக்கு சுழற் பந்து வீசத் தெரியும். இதைத் தவிர்த்து ரவி பிஸ்னாய் என்ற ஒரு சுழற் பந்துவீச்சாளரும் இருக்கிறார்.
இப்படி மூன்று பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச தெரிந்தால் அவர்களிடமே ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஓவர்கள் வரை கேப்டன்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது இந்தியாவின் பலத்தை மேலும் அதிகரிக்கும்.