ஊடக அறம், உண்மையின் நிறம்!

100 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா பகுதியில் நேற்று (21) இரவு சுமார் 8.00 மணியளவில் முச்சக்கரவண்டியொன்று சுமார் 100 அடி பாதாள பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, அதில் பயணித்த மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டவளை பகுதியிலிருந்து கரோலினா பகுதிக்கு சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது சாரதி உட்பட நான்கு பேர் முச்சக்கரவண்டியில் இருந்துள்ளனர்.

இதில் சாரதி சிறிய காயங்களுடன் தப்பியுள்ளதுடன் ஏனைய மூவரும் கடும் காயங்களுக்கு உள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகச்சைக்காக நாவலபிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இயந்திர கோளாறு காரணமாக முச்சக்கரவண்டி பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு பள்ளத்தில் உருண்டுள்ளது. இதனால் முச்சக்கரவண்டியில் இருந்தவர்கள் வெளியில் தூக்கி எறியப்பட்டுள்ளனர்.

குறித்த முச்சக்கரவண்டி குறுக்கு வீதியிலிருந்து உருண்டு வந்து தலை கீழாக ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் வீழந்துள்ளது.

இதனால் முச்சக்கரவண்டி சுக்குநூறாகியுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.