1000 ரூபாய்க்கு குறைந்தால் இரத்து?

1000 ரூபாய்க்கு குறைந்தால் இரத்து?

வங்கிக் கணக்கில், 1000 ரூபாய்க்கு குறைந்த தொகையொன்று ஆகக் குறைந்த தொகையாக, நிலுவையிலிருக்குமாயின், மாதாந்த கட்டணமொன்றை அறவிட்டு அவற்றை மூடிவிடுவதற்கு வர்த்தக வங்கிகள் தீர்மானித்துள்ளன.

மாதாந்தம் 25 ரூபாய் என்றடிப்படையில் கழித்து, நிலுவையில் உள்ள தொகை முடிவடைந்தவுடன் அந்த கணக்கை மூடிவிடுவதற்கு வங்கிகள் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

1000 ரூபாய்க்கு குறைந்த நிலுவையுள்ள கணக்குகளை பேணுவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை அடுத்தே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கணக்குகள், 40 மாதங்களுக்குள் இரத்துச் செய்யப்பட்டுவிடும் என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன.

Related posts