12 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2013ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரை பட்டம் பெற்ற மாணவர்களுக்காக இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு பட்டதாரிகள் அனைவருக்கும் ஒரே தடவையில் தொழில்வாய்ப்புகளை வழங்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்று அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கட்சி, இனம் பேதங்கள் பாராமல் வெளிப்படையாக இந்தத் தொழில்வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இந்த மாதம் 30,31 மற்றும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதிகளில் வழங்கப்படவுள்ளன.