ஆட்டமிழந்ததும் கண்ணீர் விட்ட வீரர்: வைரலாகும் புகைப்படம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். 

ஆட்டமிழந்ததும் கண்ணீர் விட்ட வீரர்: வைரலாகும் புகைப்படம்

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 36ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

முதலில் விளையாடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.

இதற்கிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். 

இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்து ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், ஆட்டம் இழந்தவுடன் வைபவ் திடீரென கண்ணீர் விட்டபடி பெவிலியன் திரும்பினார். அவருக்கு சஞ்சு சாம்சன் உள்பட பலர் ஆறுதல் கூறி தேற்றினர்.

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.