வணிகம்

15 தசம் ஆறு சதவீதத்தால் தேயிலை ஏற்றுமதி வளர்ச்சி

தேயிலை ஏற்றுமதி வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேயிலை தரகு தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 20.8 மெட்ரிக் தொன் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் 15.6 சதவீதம் ஏற்றுமதி வளர்ச்சியை எட்டியுள்ளதாக, அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தேயிலை, கறுவா மற்றும் இறப்பர் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட திட்டம் ஒன்று 270 ஏக்கர் நிலப்பரப்பில் மாத்தறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

உரம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. மத்திய அரசாங்கமும், தென் மாகாண சபையும் இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதுடன் ஒன்பது மில்லியன் ரூபாய் இதற்காக செலவிடப்படவுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close