ஊடக அறம், உண்மையின் நிறம்!

15 நிமிடத்துக்கு ஒரு பாலியல் வன்புணர்வு புகார்

2018ஆம் ஆண்டில், 15 நிமிடத்துக்கு ஒருமுறை, பாலியல் பலாத்காரம் குறித்துப் பெண்கள் புகார் செய்ததாக இந்திய அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், நிலைமையில் பெரிய மாற்றமில்லை என்று தெரிய வந்துள்ளது.

பாலியல் பலாத்காரம் குறித்துக் கிடைத்த புகார்கள்: 34,000
குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டவற்றின் வழக்கு விகிதம் : 85%
தண்டனை விதிக்கப்பட்ட விகிதம் : 27%

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கூடுதல் அக்கறையோடு கவனிக்கப்படுவதில்லை என்று மாதர் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

வழக்குகளை விரைவாக நடத்தக்கூடிய நீதிமன்றங்கள் இருந்தாலும், நீதிபதிகள் குறைவாக உள்ளனர் என்று பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டில், புது டில்லியில், மருத்துவ மாணவியொருவர் கூட்டாகப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டதன் பிறகு, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கவனம் திரும்பியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.