பிரகாசிக்க தவறிய மூன்று வீரர்கள்... அணிக்கு வரும் 17 வயது வீரர்..  இக்கட்டான நிலையில் சிஎஸ்கே!

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் மோசமாக அமைந்துள்ளதுடன், பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய இக்கட்டான நிலை இருக்கிறது. 

பிரகாசிக்க தவறிய மூன்று வீரர்கள்... அணிக்கு வரும் 17 வயது வீரர்..  இக்கட்டான நிலையில் சிஎஸ்கே!

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் மோசமாக அமைந்துள்ளதுடன், பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய இக்கட்டான நிலை இருக்கிறது. 

அத்துடன், தோனியை கோப்பையுடன் வழி அனுப்ப வேண்டும் என சிஎஸ்கே அணி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து உள்ளது.

சிஎஸ்கே அணி மெகா ஏலத்தில் எடுத்த விஜய் சங்கர், தீபக் ஹூடா ராகுல் திருப்பாதி ஆகிய மூன்று வீரர்களுமே பிரகாசிக்க தவறிவிட்டனர். 

இதன் காரணமாக சிஎஸ்கே அணி, தற்போது 17 வயதான மும்பை வீரர் ஒருவரை தங்களுடைய கேம்புக்கு அழைத்து இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

கடந்த ரஞ்சி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பையில் மும்பை அணிக்காக அபாரமாக விளையாடி ஆயுஸ் மாத்ரே, கடந்த இராணி கோப்பையில் மும்பை அணிக்காக அறிமுகமானார். 

ரஞ்சி கோப்பையில் அபாரமாக விளையாடிய அவர், சித்தேஷ் லாட், சர்துல் தாக்கூர், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு பிறகு அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெயரை பெற்றார். அத்துடன், விஜய் ஹசாரே கோப்பையில் மும்பை அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் ஆயுஸ் மாத்ரேவுக்கு இருக்கிறது. 

அவர், ஏழு இன்னிங்ஸில் இரண்டு சதம் உட்பட 458 ரன்கள் குவித்தார். குறிப்பாக நாகலாந்து எதிராக 151 ரன்கள் அடித்தார். இப்படி பல சாதனைகளை படைத்த 17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரேவை ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணி அவரை சென்னைக்கு அழைத்து இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சி எஸ் கே, சிஇ ஓ காசி விஸ்வநாதன், தேவைப்பட்டால் நிச்சயம் நாங்கள் புதிய வீரர்களை எடுப்போம். தற்போது அந்த வீரரின் திறனை சோதிப்பதற்காக சிஎஸ்கே கேம்புக்கு அழைத்து இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

சிஎஸ்கே அணியில் ஏற்கனவே சாயிக் ரஷித், சித்தார்த் ராமகிருஷ்ண கோஸ், வான்ஸ் பேடி போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.