23.9 C
Colombo
Wednesday, July 24, 2019
Home ஆடுகளம் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது இந்தியா

18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது இந்தியா

ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வெற்றியின் விளம்பிற்கு வந்த இந்தியா இறுதியில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது.

இந்தியா – நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 239 ஓட்டங்கள் சேர்த்தது.

பின்னர் 240 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டிரென்ட் போல்ட், ஹென்ரி தொடக்க ஓவர்களை வீசினர்.

இருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் திணறினர். 2-வது ஓவரை ஹென்ரி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ரோகித் சர்மா 1 ஓட்டம் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த விராட் கோலி 3-வது ஓவரின் 4-வது பநதில் எல்.பி.டபிள்யூ ஆனார். 4-வது ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்தார். மூன்று பேரும் தலா ஒரு ஒட்டத்திர் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 3.1 ஓவரில் 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து பரிதாபத்திற்குள்ளானது.

அடுத்து ரிஷப் பந்த் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடும் என்று ரசிர்கள் எதிர்பார்தத நிலையில் தினேஷ் கார்த்திக் 10-வது ஓவரின் கடைசி பந்தில் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 24 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

ஐந்தாவது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை மீட்க கடுமையாக போராடியது. இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து ஓட்டங்கள் சேர்த்தனர். இதனால் போட்டி மெதுவாக இந்தியா பக்கம் திரும்பியது.

அப்போது நியூசிலாந்து சான்ட்னெரை களம் இறக்கியது. ரிஷப் பந்த் 32 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா அப்போது 22.5 ஓவரில் 71 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததும் போட்டி இந்தியா கையை விட்டு நழுவிச் சென்றது. ரிஷப் பந்த் – ஹர்திக் பாண்டியா ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 12.5 ஓவரில் 47 ரன்கள் சேர்த்தது.

6-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியாவுடன் டோனி ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்டியா 32 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு சான்ட்னெர் பந்தில் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 30.3 ஓவரில் 92 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

7-வது விக்கெட்டுக்கு டோனியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். டோனி ஒரு பக்கத்தில் நிலைத்து நிற்க ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 39 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

ஜடேஜாவின் அதிரடியால் போட்டி பரபரப்புக்குள்ளானது. ஓவருக்கு 10 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.

கடைசி நான்கு ஓவரில் 42 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஹென்ரி 47-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் இந்தியா ஐந்து ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்துக்கு இந்த ஓவர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

இந்தியாவுக்கு கடைசி மூன்று ஓவரில் 37 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் நான்கு பந்தில் ஐந்து ஓட்டங்கள் எடுத்தனர். ஐந்தாவது பந்தை ஜடேஜா தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 59 பந்தில் 77 ஓட்டங்கள் சேர்த்தார்.

49-வது ஓவரை பெர்குசன் வீசினார். முதல் பந்தை டோனி சிக்சருக்கு தூக்கினார். ஆனால் துரதிருஷ்டவசமாக 3-வது பந்தில் ரன்அவுட் ஆனார். அத்துடன் இந்தியாவின் தோல்வி உறுதியானது. டோனி 72 பந்தில் 50 ஓட்டங்கள் சேர்த்தார். கடைசி பந்தில் புவனேஷ்வர் குமார் போல்டானார்.

கடைசி ஓவரில் சாஹல் ஆட்டமிழக்க இந்தியா 49.3 ஓவரில் 221 ஓட்டங்கள் அடித்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

சினிமா

ஜோதிகாவின் ஜாக்பாட் டிரைலர் அவுட்!

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் ஜாக்பாட் படம் உருவாகியுள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள...

வில்லனாக நடிக்கும் சூர்யா

தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த சூர்யாவை இனிமேல் வில்லனாக பார்ப்பீர்கள் என்று பந்தோபஸ்த் படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்....

பிரபல கலைஞர் காலமானார்

பிரபல வானொலி அறிவிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் டப்பிங் கலைஞரான குசும் பீரிஸ் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியது

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர் சங்க புதிய தலைவராக போட்டியின்றி...

நயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் திகதி அறிவிப்பு

நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி...

ப்ரியா வாரியாருக்கு இந்த நிலையா?

‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் கண்ணடித்து காதல் வலை வீசி இளவட்டங்களை கவர்ந்ததால் நடிகை பிரியா வாரியர் பெயர் பாலிவுட்வரை பரவியது. எதிர்பார்ப்புடன் வெளியான அப்படம் வெற்றியை ஈட்டாததால் பிரியாவாரியருக்கு அடுத்த படம்...

Download Our Aapp

நீதிபதியை தரையில் இழுந்து சென்ற பொலிஸார்

சகோதரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி ஒருதலைப் பட்சமாக நடந்துகொண்ட நீதிபதியை தரதரவென பொலிஸார் தரையில் இழுத்துச் சென்றுள்ளனர். அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த பெண் நீதிபதி ஒருவர், தன் சொந்த...

12 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

12 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரை பட்டம் பெற்ற மாணவர்களுக்காக இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இவ்வாறு பட்டதாரிகள் அனைவருக்கும் ஒரே தடவையில் தொழில்வாய்ப்புகளை வழங்கும்...

நாடாளுமன்ற செலவு எத்தனை மில்லியன் ரூபாய் தெரியுமா?

நாடாளுமன்ற வருடாந்த உணவு மற்றும் பானங்களுக்கான  120 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், உணவுகள் வீணாகுவதை குறைப்பதற்காக, நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவருந்த வருபவர்கள் பற்றிய விவரத்தை முன்னரே பெற்று, உணவு...

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெரிவு

பிரிட்டன் புதிய பிரதமராக, கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது....

மருத்துவ பட்டதாரிகள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டங்களைப் பெற்றுக்கொள்வோர், பதிவு செய்வதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சபையின் 16 ஆவது உறுப்புரையின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம், இலங்கை...

ஜோதிகாவின் ஜாக்பாட் டிரைலர் அவுட்!

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் ஜாக்பாட் படம் உருவாகியுள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள...