மரண தண்டனை

கோவையில் ஜவுளிக்கடை உரிமையாளரின் 2 குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவையை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளரின் 11 வயது மகள் மற்றும் 8 வயது மகனை கடத்தியவர்கள் பணம் கேட்டு மிரட்டியதாகவும் பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து குழந்தைகள் 2 பேருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து வாய்க்காலில் வீசியதாக சொல்லப்படுகிறது. இந்த இரட்டை கொலை தொடர்பாக குழந்தைகளை கால் டாக்சியில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநர் மோகன கிருஷ்ணன், அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்தை காண்பிப்பதற்காக கைது செய்யப்பட்ட இருவரும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது மோகன கிருஷ்ணன் தப்பிச் செல்ல முயன்றதாக கூறி அவரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

மனோகரன் மீதான வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மனோகரனுக்கு இரட்டை தூக்கு தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.

பின்னர் மனோகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை ஆபூர்வத்திலும் அபூர்வமான வகை என்று வகைப்படுத்திய உச்சநீதிமன்றம், கடந்த மாதம் மரண தண்டனையை உறுதி செய்தது.

இந்நிலையில், தனக்கு உறுதி செய்யப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரி மனோகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஆர்.எஃப். நாரிமன் தலைமையிலான சஞ்சீவ் கன்னா மற்றும் சூர்யா காந்த் அடங்கிய நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.

கீழமை நீதிமன்றத்தில் மனோகரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாரரின் வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனோகரனின் வழக்கறிஞருக்கு கடைசி வாய்ப்பு அளிப்பதாக கூறி மரணதண்டனையை அக்டோபர் 16-ம் தேதி வரை நிறுத்திவைக்க உத்தரவிட்டனர்.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play