ஊடக அறம், உண்மையின் நிறம்!

+2 மாணவிக்கு பாலியல் தொல்லை… தனியே வகுப்பறைக்கு வரச் சொன்ன ஆசிரியர்!

அண்மை காலமாக தமிழகம் முழுவதுமே பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகரித்துள்ளது.

பல ஊர்களில் வேலியே பயிரை மேயும் கதையாக, பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பும் காவலர்கள், ஆசிரியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், டியூசன் சொல்லிக் கொடுப்பவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று தெரிந்தவர்களே பெண்களுக்கு அதிகளவில் செக்ஸ் தொந்தரவு கொடுத்து வரும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், நாகர்கோவில் இடலாக்குடியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவரை, ஞாயிற்றுக்கிழமையான நேற்று, விடுமுறை தினத்திலும் தனியே வகுப்புக்கு வரும்படி தற்காலிக பள்ளி ஆசிரியர் சுரேஷ் அழைத்திருக்கிறார்.

ப்ளஸ் 2 படிக்கும் மாணவி, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பதால், ஆசிரியரின் வார்த்தையை வீட்டிலும் சொல்லிவிட்டு, பள்ளிக்குத் தனியே சென்றுள்ளார்.

இதனையடுத்து, வகுப்பறைக்குச் சென்ற மாணவிக்கு அதிர்ச்சி தரும்படியாக பள்ளி ஆசிரியர் சுரேஷ் வகுப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

கதறியழுத படியே வகுப்பில் இருந்து வேகமாக ஓட்டம் பிடித்த மாணவி, அழுது கொண்டே வீட்டிற்குச் சென்றதும் நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள், தெரிந்த பெண் அலறியடித்துக் கொண்டு அழுதபடியே ஓடிச் செல்வதைப் பார்த்து வீட்டின் முன் திரண்டனர்.

நடந்த தகவலறிந்து பொதுமக்கள் அனைவரும் பள்ளிக்கு முன்பாகத் திரண்டுள்ளனர். பின்பு ஆசிரியர் சுரேஷுக்கு தர்மஅடி கொடுத்து பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Leave A Reply

Your email address will not be published.