Sri Lanka 24 Hours Online Breaking News

200 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி குடை சாய்ந்து விபத்து

0

கம்பளை – புப்புரஸ்ஸ ஐந்து ரோட்டு சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 200 அடி பள்ளத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள், பன்விலதென்ன வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புப்புரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கிற்கு சென்று மீண்டும் பன்விலதென்ன திரும்பும் போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பன்விலதென்ன வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புப்புரஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like