மணியார் குடும்பம் சென்சார்

பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான தம்பி ராமையா அஜித், விஜய் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தனது மகன் உமாபதியை வைத்து ‘மணியார் குடும்பம் என்ற படத்தை இயக்கி வந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இன்று இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்

‘மணியார் குடும்பம்’ திரைப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் திகதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் திகதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

உமாபதி, மிருதுளா முரளி, யாஷிகா, சமுத்திரக்கனி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள தம்பிராமையா இந்த படத்திற்கு இசையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.