‘மங்கல’ பாதீடு Live

இதயும் பாருங்க

மரணதண்டனை தொடர்பில் வடக்கில் கருத்துக்கணிப்பு

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வழங்குவது தொடர்பில் வட மாகாணத்தில் சுமார் 95 சதவீதமானோர் ஆதரவு வழங்கியுள்ளனர். இது தொடர்பில் வட மாகாணத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய...

கொத்து கொத்தாக மர்மமான முறையில் இறந்துகிடந்த 90 தெருநாய்கள்

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், மர்மமான முறையில் இறந்து கிடந்த சுமார் 90 தெரு நாய்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கிழக்கு மஹாராஷ்ட்ராவின் வனப்பகுதியில் உள்ள சாலைகளின் பல்வேறு...

முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று ஏமாற்றமடைந்த சிறுத்தை

நீலகிரி அருகே முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று வாயில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை...

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு – செலவுத்திட்ட பிரேரணையை நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு சமர்ப்பித்தார்.

முன்னதாக, 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை 8.30 மணிக்கு கூடிய அமைச்சரவை கூட்டம் சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்றது.

இதன்போது, 2019ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்தாக உள்நாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தார்.

Website – www.colombotamil.lk

Facebook – http://www.facebook.com/TheColomboTamil

Twitter – www.twitter.com/TheColomboTamil

Instagram – www.instagram.com/TheColomboTamil

Contact us – info@colombotamil.lk

#SriLankaNews, #SriLankanNews, #LankaNews, #Lanka, #Tamil, #SriLanka, #ColomboNews

04:18 PM வரவு செலவு திட்ட வாசிப்பு நிறைவு. நாடாளுமன்றம் நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

04:18 PM கெசினோ அனுமதி கட்டணம் 50 டொலரால் அதிகரிப்பு

04:17 PM நாளையிலிருந்து அதிசொகுசு வாகன இறக்குமதி வரியில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன். வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள 200 சதவீத வைப்பு இரத்து செய்யப்படவுள்ளது.

04:16 PM சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவிலிருந்து 5 ரூபாயால் அதிகரிப்பு

04:14 PM யுத்தகாலத்தில் அழிவடைந்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய 5 பில்லியன் ஒடுக்கீடு

04:13 PM புகையிலைக்கான வரி 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை

04:10 PM வடக்கில் 10 பொருளாதார மத்திய நிலையங்கள். பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக வங்கிகளுக்கு 250 மில்லியன் ஒதுக்கீடு

04:06 PM இராணுவ வீரர்களின் சீருடைக்கான கொடுப்பனவை அதிகரித்தல்

04:03 PM இயற்கை அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்காக 20,000 மில்லியன்

04:00 PM சமுர்த்தி அபிவிருத்திக்கு 1,000 பில்லியன்

03:59 PM கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை.

03:59 PM பிளாஸ்ரிக், பொலித்தீன் உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயம் பதிவு செய்வது அவசியம்.

03:57 PM இயற்கை அனர்தங்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நட்ட ஈட்டை துரிதமாக வழங்க நடவடிக்கை

03:55 PM சமுர்த்தி வேலைத்திட்டத்தை மீள கட்டமைக்க நடவடிக்கை. சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை 6 இலட்சத்தால் அதிகரிக்கப்படும்.

03:53 PM இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை வலுப்படுத்த 100 மில்லியன். கிராம சக்தி வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன்.

03:51 PM குடிநீர் திட்டத்துக்காக 45,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:47 PM அரச பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 40 பில்லியன் ஒதுக்கீடு

03:46 PM ஜூலை முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு

03:45 PM அதிக வசதிகளையுடைய ரயில் சேவைகளுக்கு அதிக கேள்விகள் நிலவுகின்றன. இதற்காக 4 புதிய ரயில் பாதைகள் அமைக்ககப்படவுள்ளன. மாலபே- கொழும்பு இலகு ரயில் பாதைக்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

03:45 PM அரச பணியாளர்களுக்கு 2,500 ரூபாய் அதிகரிப்பும் ஓய்வூதியர்களின் கொடுப்பனவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வுக் காணவும் நடவடிக்கை. ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு

03:43 PM ஓட்டோ, சிறிய கார்களின் போக்குவரத்தை அதிகரிக்க கடன் திட்டமுறையொன்று அறிமுகப்படுத்தப்டவுள்ளது. அதற்கமைய தற்போதைய பாவனையிலுள்ள ஓட்டோக்கள் அகற்றப்பட வேண்டியுள்ளது.

03:41 PM 2016 ஆம் ஆண்டு எடுத்த தீர்மானத்துக்கமைய, அரச பணியாளர்களின் சம்பளம் 107 சதவீத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சம்பள தொகையை அதிகரிக்க 4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

03:39 PM கிராம வீதிகளை புனரமைப்பு செய்ய 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:37 PM கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:36 PM போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல், நகர வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு பழைய கட்டடங்களை புனரமைக்க நடவடிக்கை

03:35 PM யாழ்ப்பாணம் பழைய நகர சபையை புனரமைப்பு செய்ய 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.கண்டியை அபிவிருத்தி செய்ய தற்போது 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

03:34 PM கொழும்பில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் 10,600 மில்லியன் ஒதுக்கீடு.

03:33 PM அருவக்காடு கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு 7000 மில்லியன் ஒதுக்கீடு.

03:30 PM தேசிய ஒலிம்பிக் நிதியத்தை வலுப்படுத்த நடவடிக்கை

03:29 PM கொலன்னாவ மற்றும் அலுவிகார விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன்

03:25 PM சுகாதார துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 24,750 மில்லியன் ஒதுக்கீடு

03:21 PM விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்க நடவடிக்கை

03:20 PM பொருளாதார அபவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் உள்ளடக்கம்.

03:19 PM 3இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றினாலும் 35,000 மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர். ஏனை​யோர் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பிருந்தும் நிதி வசதி இல்லாமல் கல்வியைத் தொடர முடியாதவர்களுக்கு ‘ மை பியுச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் 1.1 மில்லியன் ரூபாய் வட்டியற்ற கடன் வழங்கப்படும் .

03:19 PM பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை அதிகரிக்க 32,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:18 PM பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:17 PM கம்பெரலிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 48,000 மில்லியன் ஒதுக்கீடு

03:15 PM ருஹூணு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடமொன்றை நிறுவ நடவடிக்கை

03:14 PM நிபந்தனையுடன் வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர வாய்ப்பு. 10 வருடங்கள் இலங்கையில் தொழில்புரிய வேண்டும் என்பது கட்டாயம்..

03:13 PM இலங்கையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு

03:10 PM கல்வித் துறைக்கு 32 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:10 PM தகவல் தொழிநுட்ப சேவை தொழிற்றுறைக்கு கலைப்பட்டத்தாரிகளை இணைத்துக்கொள்வதற்காக 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

03:09 PM வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க அனைத்துவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

03:07 PM சகல உற்பத்திகளினதும் தரத்தை உயர்த்த நடவடிக்கை

03:06 PM தனியார் நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னர் தேசிய வருமான சட்டத்தில் தேவையான திருத்தத்தை மேற்கொள்ளுதல்

03:01 PM அம்பேபுஸ்ஸ, வீரவில ஆகிய இடங்களில் இரண்டு விவசாய நிலங்களை சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து அமைப்பதற்கும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு கைவினைப் பொருட்களை செய்யும் மத்திய நிலையம் ஒன்று தொம்பே கிராமத்தில் அமைக்கப்படவுள்ளதுடன், இதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

03:00 PM வடக்கில் முஸ்லிம்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை

02:57 PM தனியார் நிறுவனங்களும் பிரசவ விடுமுறையை 3 மாத காலம் வழங்கும் வகையில் வழிவகைகளை செய்தல்.

02:54 PM 250 க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில் சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையத்தை அமைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு என்டபிரைஸஸ் ஸ்ரீ லங்காவின் கீழ் பாதுகாப்பு நிவாரண நிதியை வழங்க நடவடிக்கை

02:53 PM வெளிநாட்டில் தொழில்புரிவொருக்கு சீனமாளிகா கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

02:53 PM 25 வருடங்களில் செலுத்தக் கூடிய வகையில் 6 சதவீத வட்டி அடிப்படையிலான இலகுக் கடன் திட்டங்களை இளம் ஜோடிகளுக்கு வழங்க நடவடிக்கை

02:51 PM வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அத்துடன் அங்குள்ள மக்களுக்காக வீடமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க 24 பில்லியன் ஓதுக்கீடு

02:49 PM சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களை அதிலிருந்து மீட்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்

02:47 PM சிறுநீரக நோயாளர்களுக்கு 1800 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

02:46 PM அங்கவீனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை

02:45 PM மொரகாகந்த, களுகங்கை திட்டங்களை அடுத்தாண்டு நிறைவு செய்ய எதிர்பார்ப்பு

02:45 PM நாட்டில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் ஒரு கோப்பை பால் இலவசமாக வழங்கப்படும்

02:40 PM புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு அவை தனியாருக்கு நிர்வகிக்க கொடுக்கப்படும்.

02:39 PM 100,000 க்கு மேற்பட்டோருக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. மொனராகலையில் மாத்திரம் 35,000 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. கடந்த அரசாங்கம் இதனை கவனிக்கவில்லை. இந்த வருடம் சகலருக்கும் கழிப்பறை வசதிகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் 4 பில்லியன் ஒதுக்கீடு

02:34 PM மீன் ஏற்றுமதி மூலம் 209 மில்லியன் ரூபாய் இலாபம் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது.

02:33 PM பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைத் தொடர்பில், தேயிலை சபையுடன் கலந்துரையாடி விரைவானத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

02:31 PM கறுவாப்பட்டையை ஏற்றுமதி செய்யும் வகையில், அத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கு 75 மில்லியன் ரூபாய் ஒதுக்க நடவடிக்கை

02:30 PM தேசிய இளைஞர் சேவைகள் சபையின் உறுதிப்படுத்தப்பட்ட பயனாளிகளிகளுக்கு என்டபிரைஸஸ் கடன் திட்டத்தை பெற்றுக்​கொடுக்கும் போது முக்கியதுவம் வழங்கப்படும். இதுவரை 60,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

02:29 PM இறப்பர் உற்பத்திக்கு 800 மில்லியன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தெங்கு உற்பத்தியை அதிகரிக்கவும் தெங்கு உற்பத்தியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கவும் நடவடிக்கை

02:28 PM விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்க 250 பில்லியன் ஒதுக்கப்படும். அநுராதபுரம், குருநாகல், புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நடவடிக்கை மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவிப்பு.

02:25 PM சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகர்களை ஊக்குவிக்க நடவடிக்கை

02:21 PM என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை. இதன் மூலம் கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை

02:19 PM கடந்தாண்டு அரசியல் சூழ்ச்சியால் முதலில் நிறுத்தப்பட்டது கம்பெரலிய வேலைத்திட்டமாகும்.

02:09 PM பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு செல்ல முடிந்த போதும், கடந்தாண்டு நவம்பர் மாதம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கிடைக்கவிருந்த பல கடன் திட்டங்கள் இல்லாமல் போயின

02:08 PM வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர், நிதியமைச்சர் மங்கள சமரவீர சபையில் தற்போது உரையாற்றுகிறார்.

02:05 PM நிதியமைச்சர் மங்கள சமரவீர, 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்ததை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க தயாராகிறார்.

02:04 PM நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பம்.

02:00 PM 73 ஆவது வரவு செலவுத் திட்டம், இலங்கையில் 24 ஆவது நிதி அமைச்சரான, மங்கல சமரவீரவால் சற்று நேரத்தில் சபையில் சமர்பிக்கப்படவுள்ளது.

01:58 PM 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நாடாளுமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் சமர்பிக்கப்படவுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருகைத்தந்தவாறு உள்ளனர்.

01:49 PM கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவிருந்த, வரவு செலவுத் திட்டம், நாட்டில் இடம்பெற்ற அரசியல் குழப்பங்களின் காரணமாக சமர்பிக்கப்படவில்லை. இந்நிலையில், அன்று சமர்பிக்கத்தவறிய வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சரால் இன்று (05) சமர்பிக்கப்படவுள்ளது. இதற்கு இன்று அமைச்சரவையின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

01:33 PM இம்முறை வரவு​ செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் 2,500 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 27 வெள்ளிக்கிழமை சதுர்த்தசி காலை 8.19 மணி வரை. பின் பௌர்ணமி சதயம் இரவு 9.19 மணி வரை பின் பூரட்டாதி சித்த யோகம் நாமயோகம்: த்ருதி கரணம்: வணிஜை அகஸ்:...

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...

More Articles Like This