ஐபிஎல் தொடரில் 14 வயதில் களமிறங்கிய சிறுவன்.. வரலாறு படைத்த சூர்யவன்ஷி
ஐபிஎல் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் கிரிக்கெட் விளையாடிய வீரர் என்ற சாதனையை பீகார் மாநிலத்தை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி ஏற்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் கிரிக்கெட் விளையாடிய வீரர் என்ற சாதனையை பீகார் மாநிலத்தை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி ஏற்படுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகி ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக பிரயாஸ் ரே பர்மான் தனது 16 வயதில் அறிமுகமான ரிக்கார்டை சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
14 ஆண்டுகள் 23 நாட்கள் வயது ஆகும் நிலையில், காயம் காரணமாக சஞ்சு சாம்சன் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார்.
ஐபிஎல் தொடங்கப்பட்ட பின்னர் பிறந்த வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
பீகார் மாநிலம் தஜ்பூர் என்ற கிராமத்தில் 2011 மார்ச் 27 ஆம் தேதி வைபவ் சூர்யவன்ஷி பிறந்தார். தனது 9 வயதிலேயே பீகார் அணிக்காக விளையாடினார்.
12 வயதில் வினோ மன்கட் கோப்பை தொடரில் விளையாடிய சூர்யவன்ஷி 5 போட்டிகளில் 400 ரன்கள் குவித்தார். ரஞ்சி தொடரில் 2023 ஆம் ஆண்டு பீகார் அணிக்காக விளையாடிய போது அவருக்கு வயது 12 ஆண்டுகள் 283 நாட்களாகும்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு 13 வயதாக இருக்கும்போதே அவரை கடந்த ஆண்டு நடந்த மெகா ஏலத்தின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 1.10 கோடிக்கு வாங்கியது.