ஊடக அறம், உண்மையின் நிறம்!

25 வயது மருமகளை கொடூரமாக கற்பழித்த மாமனார்! 

அண்மை காலமாக பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், 25 வயதான இளம்பெண் ஒருவரை அவரது மாமனாரே கதற கதற கற்பழித்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தையே அதிர செய்துள்ளது.

இது குறித்து மாமனாரை கைது செய்த பொலிஸார், மருமகளைக் கற்பழித்ததற்கான காரணமாக மாமனார் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சோலங்கி எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த இளம் ஜோடியினருக்குள் கடந்த சில நாட்களாக பிரச்சினை எழுந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணின் கணவன், திடீரென தன்னுடைய மனைவியிடம் மூன்று முறை முத்தலாக் சொல்லி விட்டு, வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

இது தான் சமயம் என காத்திருந்ததைப் போல, மகன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும், அந்த பெண்ணின் மாமனார், மருமகளை அறைக்குள் தள்ளி விட்டு, துப்பாக்கியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்து கற்பழித்துள்ளார்.

அதன் பிறகு அவரிடம் இருந்து தப்பிய மருமகள், காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, பொலிஸார் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மற்றும் முத்தலாக் சட்டத்தின் கீழ் பாலியல் பலாத்கார வழக்கைப் பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்த விசாரணையில் முஸ்லீம் சட்டப்படி ஒரு பெண்ணை முத்தலாக் சொல்லி கணவன் பிரிந்து விட்டால் மீண்டும் அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து அவருடன் உறவில் இருந்து முத்தலாக் பெற்றால் மட்டுமே மீண்டும் அதே கணவனை திருமணம் செய்து கொள்ள முடியுமாம்.

அதனால், தனது மகனுக்கு மீண்டும் இதே பெண்ணை மணமுடிக்க வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்ததாக மாமனார் கூற பொலிஸார் மேலும் அதிர்ந்தனர். வில்லங்க மாமனாரின் இந்த விளக்கத்தைக் கேட்ட பொலிஸார், இந்த கற்பழிப்பு வழக்கில், மகனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற ரீதியிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்தலாக் சம்பவத்தால் இப்படி எல்லாம் நடக்குமா என்று பலரும் அதிர்ச்சியில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.