Sri Lanka 24 Hours Online Breaking News

3 அடுக்கு மாடி கட்டடம் சரிந்து 15 பேர் உயிரிழப்பு!

0

மாலி நாட்டில், விதிமுறைகளுக்கு மாறாக கட்டப்பட்டுவந்ததாக கூறப்படும் மூன்று மாடிக் கட்டடம் ஒன்று சரிந்து விழுந்ததில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாலி தலைநகரான பமாக்கோவில், மூன்று மாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவந்ன. இரு மாடிகள் ஏற்கெனவே கட்டப்பட்டு அதில் மக்கள் வசித்துவரும் நிலையில், மூன்றாவது மாடி கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில், மூன்றாவது மாடியானது, திடீரென சரிந்து விழுந்துள்ளது. இதனால் கீழிருந்த மற்ற அடுக்குகளும் சீட்டுக்கட்டுபோல சரிந்து விழுந்து உருக்குலைந்தது.

இந்த கோர விபத்தில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு சென்ற மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த பலரை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் சிக்கிய 4 வயது குழந்தையொன்று மீட்கப்பட்டபோது அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

கட்டுமான விதிமுறைகளுக்கு மாறாக கட்டடம் அமைக்கப்பட்டதாலேயே இந்த கோர விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like