உத்தரகண்ட்

உத்தரகண்ட் மாநிலத்தில், 132 கிராமங்களில், கடந்த மூன்று மாதங்களில், ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து , பெண் சிசு கொலை நடப்பதை, அரசு கண்டு கொள்ளவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர், திரிவேந்திர சிங் ராவத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, உத்தரகாசி மாவட்டத்தின், 132 கிராமங்களில், மூன்று மாதங்களில், 216 குழந்தைகள் பிறந்துள்ளன. அதில், ஒரு குழந்தை கூட பெண் குழந்தை இல்லை.

இது குறித்து, உத்தரகாசி மாவட்ட கலெக்டர், ஆசிஷ் வுகான், ”ஆண், பெண் விகிதம் சரிந்திருப்பது சற்று அதிர்ச்சியாக இருக்கிறது. மருத்துவ ரீதியாகவும், சிசுக்கள் கொலை செய்யப்படுகின்றனரா என்பது குறித்து, கிராமங்களில் ஆய்வு நடத்தப்படும். ”பெண் சிசு கொலை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.