பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் டிராவிட்.. அடுத்த பயிற்சியாளர் யார்? ரேசில் மூன்று பேர்!

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது. வரும் டி20 உலக கோப்பையுடன் ராகுல் டிராவிட் விலகிவிடுவார் என தெரிகிறது. 

பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் டிராவிட்.. அடுத்த பயிற்சியாளர் யார்? ரேசில் மூன்று பேர்!

இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளராக இருப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் ஒவ்வொரு அணித் தேர்விலும் யாரையாவது ஒரு முக்கிய வீரருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க முடியாத சூழல் உருவாகும். 

இதற்கெல்லாம் பயிற்சியாளரின் தலை தான் சேர்ந்து உருளும். வெற்றியைப் பெற்று விட்டால் பயிற்சியாளரையும் சேர்த்து ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஆனால் அதேசமயம் இந்திய அணி தோற்று விட்டால் தொடர்ந்து பயிற்சியாளர் மீது தான் அம்புகள் பாயும். 

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது. வரும் டி20 உலக கோப்பையுடன் ராகுல் டிராவிட் விலகிவிடுவார் என தெரிகிறது. 

இந்த நிலையில் அவர் சென்றால் அந்த பதவிக்கு வரப்போகும் நபர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் வி வி எஸ் லட்சுமணன். டிராவிட் போல் விவிஎஸ் லக்ஷ்மன் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணிபுரிந்து வருகிறார்.

முக்கிய வீரருக்கு காயம்... 2ஆவது டெஸ்டில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்! இந்திய அணியின் மாஸ்டர் பிளான்!

மேலும் டிராவிட் இல்லாத நிலையில் பயிற்சியாளராகவும் லக்ஷ்மன் செயல்பட்டு வெற்றியும் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இதனால் டிராவிட்டுக்குப் பிறகு லட்சுமணனுக்கு பயிற்சியாளராக வர 99 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை லக்ஷ்மன் இல்லை என்றால் அந்தப் பதவிக்கு கம்பீர் வர வாய்ப்பு உள்ளது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கம்பீர் வரும் மே மாதம் அந்தப் பதவியை நிறைவு செய்கிறார். இந்த நிலையில் அரசியலில் இருந்து விலக கம்பிருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

மேலும் பதவியில் இருக்கும் போதே கம்பீர் ஐபிஎல் தொடர்களில் மென்டராக பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே பயிற்சியாளர் பதவிக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு அதைப் பற்றி யோசிக்கவில்லை. கிடைத்தால் பார்ப்போம் என்று கூறி இருந்தார். 
கிரிக்கெட் யுத்திகள் குறித்து கம்பீர் சிறப்பாக பணியாற்றக் கூடியவர்.இதனால் கம்பிருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் மும்பை அணியின் இயக்குனராக இருக்கும் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தன. இந்திய அணியில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு பயிற்சியாளர்கள் தான் இருக்கிறார்கள். 

இதனால் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தேவை என நினைத்தால் அந்த பட்டியலில் ஜெயவர்த்தன தான் முதலிடத்தில் உள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp