யாராலும் தொடவே முடியாது..  3 மெகா சாதனை படைத்த விராட் கோலி!

இலங்கை அணிக்கு எதிராக 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 10 சதங்களை அடித்துள்ளார். 

யாராலும் தொடவே முடியாது..  3 மெகா சாதனை படைத்த விராட் கோலி!

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இன்றுடன் 16ஆம் ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், ரசிகர்கள் கோலியின் சாதனைகளை கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி அறிமுகமானதுடன்,  கடந்த 16 ஆண்டுகளில் விராட் கோலி இந்திய அணிக்காக எண்ணற்ற சாதனைகளை படைத்திருக்கிறார். 

இதுவரை 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றார்.

அத்துடன், உலகக்கோப்பை தொடரின் போது நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தனது 50வது அரைசதத்தை விளாசிய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார்.

மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்திருக்கிறார். 

அத்துடன், இலங்கை அணிக்கு எதிராக 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 10 சதங்களை அடித்துள்ளார். 

அதேநேரம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடியுள்ள 43 ஒருநாள் போட்டிகளில் 9 சதங்களை விளாசி சாதனை படைத்துள்ளார். 

இதுமட்டுமின்றி உலகக்கோப்பை தொடரில் 700 ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற புதிய வரலாற்றை விராட் கோலி படைத்துள்ளார். 

மேலும், கடந்த உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி 3 சதங்கள், 6 அரைசதங்கள் உட்பட மொத்தமாக 765 ரன்களை விளாசியுள்ளார். 

இதற்கு முன்பாக ரோஹித் சர்மா முதலிடத்தில் இருந்த நிலையில்,. அவரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். 

இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 4,500 ரன்கள் தேவைப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp