ஐபிஎல் முடிந்ததும் நீக்கப்பட உள்ள மூன்று கேப்டன்கள் யார் தெரியுமா? 

ஐபிஎல் 17ஆவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் மட்டுமே இதுவரை பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது.

ஐபிஎல் முடிந்ததும் நீக்கப்பட உள்ள மூன்று கேப்டன்கள் யார் தெரியுமா? 

ஐபிஎல் 17ஆவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் மட்டுமே இதுவரை பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது.

மற்ற சீசன்களைபோல் இல்லாமல், 17ஆவது சீசனில் கிட்டதட்ட அனைத்து அணிகளுமே சம பலத்தில்தான் விளையாடி வருகிறது. அனைத்து அணிகளிலும் தரமான பேட்டர்கள், பௌலர்கள் இருக்கிறார்கள்.

சில அணிகளில் தரமான வீரர்கள் இருந்தும், அவர் திடீரென்று பார்ம் அவுட் ஆகி சொதப்புகிறார்கள். ஒருசிலர் சொதப்புவதால், அந்த அணிக்கே பெரும் பின்னடைவு ஏற்படுகிறது.

உதாரணமாக கிளென் மேக்ஸ்வெல், ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஆன்ரிக் நோர்க்கியா, முகமது சிராஜ் என, திடீரென்று பார்ம் அவுட் ஆன வீரர்கள் லிஸ்டை அடுக்கிக் கொண்டே போகலாம்.

18ஆவது சீசனுக்கு முன் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. ஒரு அணி, 8 வீரர்கள் வரை தக்கவைக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. அதே சமயம், சில அணிகள் தங்களது கேப்டன்களை மாற்றியமைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

கடந்த சீசனில், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்றது. தற்போதும், தவான் தலைமையில் 5 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளனர். இதனால், தவானை நீக்க வாய்ப்புள்ளது.

நடப்பு சீசனில், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி சுமாராகதான் இருக்கிறது. இந்த அழுத்தம் காரணமாக, அவரால் பேட்டிங், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. மேலும், ரசிகர்களும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், அடுத்த சீசனில் பும்ராவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க வாய்ப்புள்ளது.

சிஎஸ்கே மூன்று முறை கோப்பை வென்றபோது, அந்த அணியில் இடம்பெற்ற பாப் டூ பிளஸியை ஆர்சிபி அணி, கேப்டனாக நியமித்தது. ஆனால், அவரது தலைமையில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அடுத்த சீசனில் டூ பிளஸி ஒரு வீரராக மட்டுமே இடம்பெற வாய்ப்புள்ளது.

ஐபிஎலில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குதான் நிரந்தர கேப்டன் இல்லாமல் இருந்தது. பாட் கம்மின்ஸை கொண்டு வந்து அந்த குறையை தீர்த்துவிட்டனர். அதேபோல், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸும் புது நிரந்தர கேப்டனை கொண்டு வந்தால்தான், அந்த அணிகளுக்கு பிரச்சினை தீரும்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp