தோனி படைக்கப்போகும் 3 வரலாற்று சாதனைகள்: இத யாராலும் இனி தகர்க்கவே முடியாது!

18ஆவது சீசனில் தோனி மூன்று வரலாற்று சாதனைகளை படைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

தோனி படைக்கப்போகும் 3 வரலாற்று சாதனைகள்: இத யாராலும் இனி தகர்க்கவே முடியாது!

ஐபிஎல் 18ஆவது சீசனில், தோனி விளையாடுவது உறுதியாகிவிட்டதுடன், இதுதான் தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது. இந்த நிலையில், 18ஆவது சீசனில் தோனி மூன்று வரலாற்று சாதனைகளை படைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

அதிக வயதில் 50 ரன்கள் சாதனை

மகேந்திரசிங் தோனிக்கு, தற்போது 43 வயதாகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால், 43 வயது, 193 நாட்கள். ஒருவேளை, 18ஆவது சீசனில் தோனி அரை சதம் அடிக்கும் பட்சத்தில், ஐபிஎலில் அதிக வயதில் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

2013ஆம் ஆண்டில் ஆர்சிபிக்கு எதிராக ஆடம் கில்கிறிஸ்ட்,  85* ரன்களை அடித்ததுதான், ஐபிஎலில் அதிக வயது வீரரின் அரை சதமாக இருக்கிறது. 

அப்போது, ஆடம் கில்கிறிஸ்டிற்கு 41 வயது, 181 நாட்கள். தோனி 40 வயது, 262 நாட்களில் அரை சதம் அடித்து, இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 2022ஆம் ஆண்டில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அரை சதம் அடித்திருந்தார்.

அதிக ரன்கள் சாதனை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, அதிக ரன்களை அடித்த வீரராக தோனி சாதனை படைக்க உள்ளார். சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கேவுக்காக 4,687 ரன்களை குவித்தார். தோனி இந்த சாதனையை தகர்க்க 18 ரன்கள் மட்டுமே தேவை. தோனி தற்போது, 4669 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கெட் கீப்பராக சாதனை

மகேந்திரசிங் தோனி, ஐபிஎலில் விக்கெட் கீப்பராக 190 விக்கெட்களை எடுத்திருக்கிறார். ஸ்டெம்பிக், கேட்ச் மூலம் இப்படி 190 விக்கெட்களை எடுத்து, முதல் இடத்தில் இருக்கிறார். இன்னமும், 10 பேட்டர்களை ஸ்டெம்பிற்கு பின்னால் இருந்து வீழ்த்தும் பட்சத்தில், ஐபிஎலில் இந்த சாதனையை படைத்த முதல் வீரராக திகழ்வார். 

தற்போது, ஐபிஎலில் ஆடும் விக்கெட் கீப்பர்களில், ரிஷப் பந்த், 90 பேட்டர்களை ஸ்டெம்பிற்கு பின் நின்று வீழ்த்தியிருக்கிறார். இதனால், தோனி கூடுதலாக 10 பேட்டர்களை, ஸ்டெம்பிற்கு பின் நின்று வீழ்த்தினால், இந்த சாதனையை செய்த ஒரே விக்கெட் கீப்பராக தோனி இருக்க அதிக வாய்ப்புள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp