சிஎஸ்கே அணியிலிருந்து திடீரென விலகிய முக்கிய வீரர...டோனியும் இல்லை? அப்போ என்ன திட்டம்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது லீக் ஆட்டத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் வரும் வெள்ளிக்கிழமை விளையாட உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது லீக் ஆட்டத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் வரும் வெள்ளிக்கிழமை விளையாட உள்ளனர்.
இந்த நிலையில், சிஎஸ்கே அணியில் முஸ்தஃபீசுர் ரஹ்மான் பங்கேற்க மாட்டார் என்றும், டி20 உலக கோப்பைக்கு அமெரிக்காவுக்கு செல்ல விசா எடுப்பதற்காக அவர் அவசரமாக வங்கதேசத்துக்கு சென்றுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், அவர் நாளைய ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்பதால், சிஎஸ்கே அணி யாரை அவருடைய இடத்திற்கு பயன்படுத்தப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால், அவர் விளையாடிய மூன்று போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில் அவரின் வெற்றிடம் சிஎஸ்கேவுக்கு பின்னடைவு தான் ஏற்படுத்தும்.
முஸ்தஃபீசுர் ரஹ்மான் இல்லை என்றால் அவருக்கு பதிலாக சுழற் பந்துவீச்சாளர் மகிஷ் தீக்சனாவை சேர்க்க அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் வேகப்பந்துவீச்சாளராக சர்துல் தாக்கூர் ஆட்டத்தில் களமிறங்க கூடும்.
இந்த நிலையில் சர்துல் தாக்கூர், இம்பேக்ட் வீரராக பௌலிங் மட்டும் களம் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவம் துபேவை பேட்டிங்கிற்காக பயன்படுத்திவிட்டு பந்து வீசும் போது அவருக்கு பதிலாக சர்துல் தாக்கூரை கொண்டு வரலாம்.
இதே போன்று ராஜவர்தன் ஹங்கேர்கருக்கு இதுவரை சிஎஸ்கே வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனால் அவரையாவது நாளை ஆட்டத்தில் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தோனியும் நாளைய ஆட்டத்தில் களமிறங்குவாரா என்பது சந்தேகமே என்று தெரிவிக்கப்படுகின்றது.