Latest news from around the world

35 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி

இலங்கை – ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் டக்வெத் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.

எதின்பேர்க்கில் (Edinburgh) இடம்பெற்ற இந்த போட்டியில், முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை பெற்றது.

ஸ்கொட்லாந்து அணி துடுப்பாடிய நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி 34 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதுடன் ஸ்கொட்லாந்து அணிக்கு வெற்றி இலக்காக 235 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

ஸ்கொட்லாந்து 33.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 199 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!