ரூ. 4 இலட்சம் பெறுமதியுடைய கஞ்சாவுடன் ஒருவர் கைது

37
நீர்கொழும்பு
W3Schools

விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட கேரள கஞ்சாவுடன் சந்தே நபர் ஒருவர் அநுராதபுரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 4 இலட்சம் ரூபாய்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியில் இருந்து அநுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கஞ்சா விநியோகிக்கப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனையடுத்து, நேற்று (14) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 42 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரை இன்றைய தினம் அநுராதபுரம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

W3Schools