43 வயதில் தோனி செய்த ஸ்டம்பிங்... மிரண்டு போன சூர்யகுமார் யாதவ்.. நடந்தது என்ன!
சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை 0.12 வினாடியில் ஸ்டம்பிங் செய்து மிரள வைத்தார்.

நடப்பு 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில், சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை 0.12 வினாடியில் ஸ்டம்பிங் செய்து மிரள வைத்தார்.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ததுடன், முதல் ஓவரிலேயே ரோகித் சர்மாவை இழந்தது. அதன் பின் 3 விக்கெட்டுகள் பறிபோனதுடன், சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா விளையாடினர்.
இதயும் படிங்க: சென்னை அணியிலிருந்து பதிரானா நீக்கப்பட்டது ஏன்? வெளியான காரணம்!
இந்த நிலையில் நூர் அகமது வீசிய பந்தை அடிப்பதற்காக சூர்யகுமார் யாதவ் முன்னேறி வந்தார். ஆனால், வேறு பக்கமாக திரும்பிய பந்தை பிடித்த தோனி 0.12 வினாடிகளில் ஸ்டம்பிங் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
நீண்ட நேரம் நான்காவது விக்கெட் விழாமல் இருந்த நிலையில் தோனியின் திறமையால் சிஎஸ்கே அணிக்கு நான்காவது விக்கெட் கிடைத்ததுடன், அதன் பின் வரிசையாக மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்தது.
சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த ஆட்டமிழக்க, ராபின் மின்ஸ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.