48 மணித்தியாலங்களில் 4 படுகொலைகள்

இதயும் பாருங்க

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...

ரெஜினோல்ட் குரே இராஜினாமா

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து ரெஜினோல்ட் குரே தனது இராஜினாமா செய்துள்ளார்.

இராணுவ தளபதி நியமனம் இலங்கையின் உள்விவகாரம் – வெளிவிவகார அமைச்சு

இராணுவ தளபதி நியமனமானது இலங்கையின் உள்விவகாரம் என்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, இதில் வெளிநாடுகள் தலையிடவோ அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என, அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால் இன்று...

கடந்த 48 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரட்டை கொலை உள்ளிட்ட உள்ளிட்ட 4 படுகொலைகள் பதிவாகியுள்ளன.

அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளிலும் பலர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாத்தளை கலேவலை தேவஹூவ பிரதேசத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கமத்தொழில் உற்பத்தி உதவி ஆராய்ச்சியாளரான 53 வயதான காமினி சுரவீர மற்றும் அவரது மனைவியான கமத்தொழில் தயாரிப்புக்களுக்கான மத்திய மாகாண சபையின் விருதை வென்ற 51 வயதான அனுலா சுரவீர ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 8 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்களால் இந்த படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்காலாத் என சந்தேகம் வெளியிட்டுள்ள கலேவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அநுராதபுரம் சேனபுரம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் முன்னெடுக்கப்பட்ட சூதாட்ட நிலையத்தில் ஏற்பட்ட மோதலின் போது, நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை ஹிங்குராங்கொட பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இடம்பெற்ற மோதலில் 25 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.

கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மனைவியான குறித்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான கணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை, தம்பகல்ல கொல்லதெனிய பிரதேசத்தில் 35 வயதுடைய தந்தையொருவர் குடும்பத தகறாற்றில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனக்கு தானே தீமூட்டிக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கோனகங்கார, 17 ஆம் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

மகியங்கனை – பதியத்தலாவ வீதியில் மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த இருவரும் பதுளை வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

மூவர் பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் வீதியில் நிறுத்தப்பட்டிருந்தபோது, மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய மற்றுமொரு நபர், குறித்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்தை ஏற்பட்டுத்தியுள்ளார். இதனையடுத்து, குறித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யபட்டுள்ளார்.

இந்த நிலையில், கேகாலை – அவிசாவளை வீதியில் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் வீதியோரத்தில் நின்ற நபர் மீது முச்சக்கரவண்டி மோதியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தேவாலகந்த பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க, பண்டாரகம – கெஸ்பேவ வீதியில் பாதையை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இது புதுசு

மீரா மிதூன் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் மீரா மிதூன். இந்நிலையில் அவர் ஜோயி மைக்கேல் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக...

விடைபெற்றார் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு, பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு நேற்று இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. கடந்த 17ஆம் நாளுடன் ஓய்வுபெற்ற 22 ஆவது இராணுவத் தளபதி மகேஸ்...

அரச காணக்காய்வு குழுவின் செயற்பாடுகள் இன்று முதல் ஊடகங்களுக்கு

அரச காணக்காய்வு குழுவின் செயற்பாடுகளை வெளிப்படையாக ஊடகங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் அரச காணக்காய்வு (கணக்கு) குழுவின் செயற்பாடுகளை வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண...

மீரா மிதூன் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் மீரா மிதூன். இந்நிலையில் அவர் ஜோயி மைக்கேல் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் எழுந்துள்ளது. முன்னதாக, ஆடை வடிவமைப்பாளர் ஒருவரிடம்...

Episode 58 – கையை அறுத்துக் கொண்டது ஏன்..? மனம் திறந்த மதுமிதா..!

தமிழ் மக்களுக்காக உயிரை கொடுக்க முடியா என்று கேட்டனர், அதனால் கையை அறுத்துக் கொண்டேன். பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன் என பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் மதுமிதா தெரிவித்துள்ளார். Episode 58 -...

More Articles Like This